"வினயை விதேயா ராமா"

Published By: Daya

11 Jan, 2019 | 04:00 PM
image

தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதா நாயகனாக நடிப்பில்  மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான "வினயை விதேயா ராமா" தமிழில் வெளியாகிறது.

பிரிபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு  இப்படத்தை இயக்குகிறார். 'பாரத் என்னும் நான்' என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓப்ராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.

மேலும் பிரசாந்த்,சினேகா,மதுமிதா,முகேஷ் ரிஷி,ஜெபி,ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் என்று பெரிய நட்சத்திர வரிசை மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், செண்டிமெண்ட், வன்முறை, சாஹசம் என்று பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக "வினயை விதேயா ராமா"  உருவாகியுள்ளது.

தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, பண்டி ரமேஷ்  ஆகியோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது.

கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்க மட்டும் பதினோரு கோடி ரூபா சிலவிடப்பட்டுள்ளது.கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்துள்ளார். டி. வி. வி.  என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் "வினயை விதேயா ராமா"பிப்ரவரி முதல் வாரம் தமிழ் நாடு மற்றும் கேரளமெங்கும் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35