இங்கிலாந்து அணியின் முன்னணி டென்னிஸ் வீரர் அண்டி மரே, அடுத்தவாரம் ஆரம்பமாகும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னீஸ் தொடருடன் ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.  

மூன்று கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றுள்ள ஆன்டி மரே, எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ளார். 

இந்த நிலையில் இத் தொடருடன் தான் ஓய்வுபெற முடிவு செய்து இருப்பததாக கண்ணீருடன் அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, 

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிதான் எனது கடைசி தொடராக இருக்கும் என கருதுகிறேன். இடுப்பு காயத்தால் அவதிப்பட்டு வருகிறேன். எனது சொந்த நாட்டில் நடக்கும் விம்பிள்டன் போட்டியோடு ஓய்வு பெற விரும்புகிறேன். ஆனால் நீண்ட காலமாக வலியால் அவதிப்படுகிறேன். அந்த வலியுடன் அடுத்த 5 மாதங்களுக்கு விளையாட முடியும் என்று என்னால் உறுதியாக கூற முடியாது. இதனால் அவுஸ்திரேலிய ஓபன் போட்டி எனது கடைசி தொடராக இருக்கலாம் என்றார்.