இலங்கை அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 35 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

எடன் பார்க்கில் இன்று ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு நியூஸிலாந்து அணியை பணித்தது.

அதன்படி முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை குவித்தது.

180 என்ற வெற்றியிலக்கை நோக்கடி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 35 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

இலங்கை அணி சார்பில் திஸர பெரேரா 43 ஓட்டங்களையும், குசல் பெரேரா 23 ஓட்டங்களையும் அதிபடியாக பெற்றனர். பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பாக லொக்கி பெர்சன், ஈஷ் சோதி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், டிம் சவுதி, கொட் கேலன், டக் பிரஸ்வெல், மிட்செல் சாண்ட்ர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் நியூஸிலாந்து அணி டெஸ்ட் தொடரை 1:0 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 3:0 என்ற கணக்கிலும் இருபதுக்கு 20 தொடரை 1:0 என்ற கணக்கிலும் கைப்பற்றியுள்ளது.