(இரோஷா வேலு) 

கல்கிஸ்ஸை காலி வீதியில் அமைந்துள்ள ஆயுள்வேத நிலையமொன்றில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 19 வயதுடைய பேராதெனியவைச் சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆயுர்வேத நிலையத்தில் பாலியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கல்கிஸ்ஸை பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டை கவனத்தில் கொண்டு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் சுற்றிவளைப்பு உத்தரவொன்று பெறப்பட்டு நேற்றைய தினம் மாலை 3 மணியவில் கல்கிஸ்ஸை பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது, குறித்த ஆயுர் வேத நிலையத்தில் கடமையாற்றிவந்த பலர் தப்பித்துச் சென்றுள்ளதோடு, நிலையத்தில் முகாமையாளராகவும் பாலியல் நடவடிக்கைகளுக்கு துணைபோனதாகவும் சந்தேகிக்கப்படும் யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டார். 

இந்நிலையில், அவரை நேற்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருந்த கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.