இலங்கைக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட போட்டியில் நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களை குவித்துள்ளது. 

எடன் பார்க்கில் இன்று ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு நியூஸிலாந்து அணியை பணித்தது.

அதன்படி முதலாவதாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணியின் வீரர்கள் இலங்கை  அணியின் பந்து வீச்சுக்களை சமாளிக்க முடியாது, அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

குப்டீல் ஒரு ஓட்டத்துடனும், முன்ரோ 16 ஓட்டத்துடனும், டிம் சைபெட் 2 ஓட்டத்துடனும், ஹேன்றி நிக்கோல்ஸ் 4 ஓட்டத்துடனும், மிட்செல் சாண்ட்டர் 13 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் நியூஸிலாந்து அணி 9 ஆவது ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 55 ஓட்டங்களை குவித்தது.

தொடர்ந்தும் ஆறாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்தாடிய ரோஷ் டெஸ்லர் மற்றும் டக் பிரஸ்வெல் அதிரடி காட்ட நியூஸிலாந்து அணி 14.2 ஓவர்களுக்கு 100 ஓட்டங்கள‍ை குவித்தது. டெஸ்லர் 32 ஓட்டத்துடனும், டக் பிரஸ்வெல் 20 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

எனினும் அதே ஓவரின் 5 ஆவது பந்தில் 37 பந்துகளை எதிர்கொண்ட டெஸ்லர் 33 ஓட்டத்துடன்  திஸர பெரேராவின் பந்து வீச்சில் திக்வெல்லவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 

தொடர்ந்து ஆடுகளம் நுழைந்த கொட் கேலினுடன் சேர்ந்தாடிய பிரஸ்வெலும் 17.3 ஆவது ஓவரில் 26 பந்துகளை எதிர்கொண்டு 5 ஆறு ஓட்டங்கள் ஒரு நான்கு ஓட்டங்கள் என அதிரடியாக விளாசி 44 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 7 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த கொட் கேலன் மற்றும் டிம் சவுதி தொடர்ந்து அதிரடி காட்டி நியூஸிலாந்து அணி 20 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை இழந்தது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 180 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.