மாத்தறையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த ரயில் விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வசகடுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான  தில்ஷான் என்ற நபரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.