மன்னார், வங்காலைப்பாடு பகுதியில் சட்டவிரோத ஆமை இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவரை கடற்படையினர் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

மன்னார், வங்காலைப்பாடு பகுதியில் கடற்படையினர் நடை பயிற்சியை மேற்கொண்ட போது நபர் ஒருவர்  சந்தேகத்தின் பேரில்  நடமாடிய நிலையில் குறித்த நபரை விசாரணைக்குட்படுத்தியபோது குறித்த நபரிடமிருந்து சுமார் 3 கிலோ 185 கிராம் நிறையுடைய ஆமை இறைச்சியை கைப்பற்றியுள்ளதாக கடற் படையினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், குறித்த சந்தேக நபரை ஒரு தொகை ஆமை இறைச்சியுடன் கடற்படையினர் கைதுசெய்து மேலதிக விசாரணைக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.