மட்டக்களப்பில் கிழக்கு மக்கள் ஒன்றியம் எனும் பெயரில் துண்டுப் பிரசுரம் மூலம் ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நகரில் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்ததுடன் அரச, தனியார் போக்குவரத்து சேவை வழமைபோன்று நடைபெற்றதனை காணமுடிந்தது.

இதேவேளை மட்டக்களப்பு சந்தை, வைத்தியசாலைகள் வழமைபோன்று இயங்கியதுடன் மக்கள் மிகக் குறைவாகவே அவ்விடங்களில் காணப்பட்டனர்.

மற்றும் இங்குள்ள பாடசாலைக்கு ஒர்சில மாணவர்கள் மாத்திரம் சென்றதுடன் அவர்களும் பின்னர் வீடு திரும்பிவிட்டதனை காணமுடிந்தது.

இன்றையதினம் காலை மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள் சில முற்பகல் 10.30மணிக்குப் பின்னர் திறந்து, தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கெண்டதனை காணமுடிந்தது.

கிழக்கு மாகாண ஆளுனராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்  நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதியின் கவனததிற்கு கொண்டுசெல்லும் முகமாக கிழக்கு மக்கள் ஒன்றியம் எனும் அமைப்பினர் மேற்படி கடையடைப்பு, ஹர்தாலுக்கு அமைப்பு விடுத்திருந்தனர்.