வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதியில் வீசப்பட்டுள்ள குப்பைகளில் கோழிக்கழிவுகள் வீசப்பட்டு காணப்படுகின்றன. இதனால் அப் பகுதிகளில் துர்நாற்றம் வீசிவருவதாக வர்த்தக நிலையங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் பஸ் நிலையப் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களில் துர்நாற்றம் வீதி வருவதுடன் பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிக்கு வருபவர்களும் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகிவருகின்றனர். 

நகரசபை ஊழியர்கள் குப்பை வீசுவதற்கு வாளிகளை வைத்துள்ளபோதிலும் அதனை மூடிவைப்பதில்லை என்றும் வர்த்தகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.