பிரதி அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்தற்ற இரு அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

குறித்த பதவியேற்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அதன்படி விசேட பிராந்திய  அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சராக  வீ. இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சராக  அப்துல் மகரூப் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

தொழில் மற்றும் தொழிற்சங்க விவகார அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ரவீந்திர சமரவீர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதனிடையே அமைச்சர் தயா கமகேவுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அவருக்கு சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.