சிலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 மாத குழந்தை உட்பட 09 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 11 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். 

சிலியில் வால்டிவியா மாகாணத்தின் தலைநகர் வால்டிவியா மற்றும் மாபில் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது.குறித்த காரில் 10 மாத பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் இருந்தனர். 

இதன்போது திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் லொறியொன்றின் மீது மோதியது, இதனால் நிலைநடுதடுமாறு எதிர்திசைக்கு சென்ற லொறி எதிரேவந்த வேன் மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இந்த கோர விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்ததுடன் மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும், மீட்பு படையினரும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.