இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க நாளை இடம்பெறவுள்ள நியூஸிலாந்து அணியுடனான சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி நியூஸிலாந்தின் எடன் பார்க்கில் இடம்பெற்ற இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிக்கிடையோயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் களத் தடுப்பில் ஈடுபட்டிருந்த வேளை ஏற்பட்ட உபாதை காரணாகவே அவர் இப் போட்டியில் விளையாட மாட்டார் என இலங்கை நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையோயான இப் போட்டியானது இலங்கை நேரப்படி நாளை காலை 11.00 மணிக்கு எடன் பார்க்கில் ஆரம்பமாகவுள்ளது.