இன்று சிலர் பத்­தி­ரி­கை­களில் அறிக்கைப் போர் நடத்திக் கொண்­டுள்­ளனர். நான் மௌன­மாக இருந்து கொண்டு கட்­சியை கச்­சி­த­மாக வழி நடத்திக் கொண்டு போவ­தற்கு எண்­ணு­கின்றேன்.

இன்று ஏற்­பட்­டுள்ள சவால்­களை விடவும் பெரிய சவால்­களை சந்­தித்­துள்ளோம். இன்று ஏற்­பட்­டுள்ள குடும்பிச் சண்­டையில் நான் ஈடு­பட வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

இவ்­வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும், நகர திட்­ட­மிடல், நீர் வழங்கல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் சம்­மாந்­துறை ஆதார வைத்­தி­ய­சா­லையில் நேற்று பூர்த்­தி­யாக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை திறந்து வைத்­ததன் பின்னர் உரை­யாற்றும் போது தெரி­வித்தார்.

கிழக்கு மாகாண சபையின் சுகா­தார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் தலை­மையில் நடை ­பெற்ற இவ்­வை­ப­வத்தில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,கடந்த மாகாண சபைத் தேர்­தலில் நாங் கள் தனித்துப் போட்­டி­யிட்டு சம்­மாந்­துறைத்தொகு­தியை வெற்றி கொண்டோம். அந்தத் தேர்­தலில் எங்­க­ளுக்­கு­ரிய மாகாண சபை முத­ல­மைச்சர் பத­வியை சற்று தாம­தப்படுத்தி கிழக்கு மாகாண சபையின் சுகா­தார அமைச் சர் பத­வியைப் பெற்றுக் கொண் டோம்.

அந்த அமைச்சர் பதவி மூல­மாக சம்­மாந்­துறை ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு பல அபி­வி­ ருத்­தி­களை செய்ய முடிந்­துள்­ளன. இந்த வைத்­தி­ய­சாலை மட்­டு­மன்றி சூழ­வுள்ள ஏனைய வைத்­தி­ய­சா­லை­களும் அபி­வி­ருத்­தி­களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக் கள் ஏற்­பட்­டுள்­ள­தை­யிட்டு அனைவரும் சந்­தோ­ஷப்­ப­டு­கின்றோம்.

அடுத்த ஐந்தாம் திகதி தொடக்கம் பாரா­ளு­மன்றம் ஒரு அர­சியல் யாப்பு சபை­யாக செயற்­ப­ட­வுள்­ளது. வெகு­வி­ரை­விலே இந்த நாட்­டிற்கு புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கின்ற கட்டம் ஆரம்­ப­மாக இருக்­குகின்­றது. இதன் போது எமது சமூகம் சார்ந்த விட­யங்­க­ளையும், உரி­மை­க­ளையும் பெற்றுக் கொள்­வ­தற்­கு­ரிய முயற்­சி­களில் ஈடு­ப­ட­வுள்ளோம்.

இரண்டு பிர­தான கட்­சி­களின் ஆட்சி நாட் ­டிலே இருக்­கின்ற சூழலில் நாட்டில் பொரு­ளா­தார நெருக்­கடி கொஞ்சம் உக்­கிரம் அடை­கின்ற பின் புலத்தில் நாங்கள் நீண்ட காலமாக

அடை­வ­தற்கு காத்­தி­ருந்த அபி­விருத்­தி­களை சாதித்துக் கொள்­வ­தற்­கான தயார்­ப­டுத்­தல்­களை செய்து கொண்டு வந்துள்ளோம். என்­னு­டைய அமைச்சின் ஊடாக நீர்­வ­ழங் கல் வடி­கா­ல­மைப்பு சபை சம்­மாந்­துறை வங்­க­ளா­வ­டி­யி­லுள்ள நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தி­லி­ருந்து கல்­முனை வரை­யி­லான நீர் வழங் கல் திட்­டத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான புதிய குழாய் பதிக்கும் வேலைகள் முடி­வ­டையும் தறு­வாயில் உள்­ளன.

எதிர்­வரும் நோன்பு காலத்­திற்கு முன்­ன­தாக இப்­பி­ர­தே­சத்தில் நிலவும் நீர் வழங்கல் பிரச்­சி­னை­களை முழு­மை­யாக தீர்க்­கலாம் என்ற நம்­பிக்­கை­யோடு நட­வ­டிக்­கை­களை எடுத்துக் கொண்டு வரு­கின்றோம்.

மேலும், நெய்­னா­காடு போன்ற பிர­தே­சங்­க­ளுக்கும் விரை­வாக நீர் வழங்க நட­வ­டிக்­கை­களை எடுத்­துள் ளோம். இதற்கு அடித்­த­ள­மிட்ட தலைவர் அஷ்­ரப்பை நினைவு கூரு­கின்றோம்.

சும்­மாந்­துறை பிர­தே­சத்­தினை நகர அபி­வி­ருத்தித் திட்­ட த்தின் கீழ் அபிவிருத்தி செய்யவுள்ளோம். சம்மாந் துறைக்கு சந்தைக் கட்டிடத் தொகுதி, பஸ் நிலையம், நகர சபையாக மாற்றுவதற்கும் நடவடிக்கைகளை எடு த்துக் கொண்டு வருகின்றோம்.

கல்முனை நகரை அபிவிருத்தி செய்யும்போது அத னோடு இணைந்தவாறு சம்மாந்துறையும் அபிவிருத்தி செய்யப்படும் என்றார்.