யாழில். பேருந்தில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பையில் இருந்து 25 பவுண் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் என்பன நேற்றைய தினம் மாலை களவாடபட்டுள்ளது. 

சுன்னாகம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பஸ்ஸில் குறித்த பெண் பயணித்துள்ளார்.அதன் போது தனது கைப்பையில் 25 பவுண் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை வைத்திருந்துள்ளார். 

பஸ்ஸில் காணப்பட்ட கூட்ட நெரிசல்களை தமக்கு சாதகமாக்கிய திருடர்கள் குறித்த பெண்ணின் கைப்பையில் இருந்து பணத்தினையும் நகையையும் களவாடி உள்ளனர். 

குறித்த பெண் யாழ்.நகரை வந்தடைந்த போதே தனது கைபையை பார்வையிட்ட போது , கைப்பை திறந்த நிலையில் காணப்பட்டு உள்ளது. அதன் போதே தனது நகையும் பணமும் களவாடப்பட்டதனை அறிந்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.