பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை 80 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி முதல் வருடத்துக்கான அடிப்படை சம்பளம் 625 ரூபாவும், ஏனைய கொடுப்பனவுகளுடன் மொத்தமாக 875 ரூபாவும் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டாம் வருட அடிப்படை சம்பளம் 650 ரூபாவாகவும் மூன்றாம் வருடத்துக்கான அடிப்படை சம்பளம் 675 ரூபாவாகவும் வழங்குவதற்கு கூட்டு ஒப்பந்தம் தயார் படுத்தப்பட்டதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் தொழிற்சங்கங்கள் இந்த வேதன அதிகரிப்பை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பதை தெரிவிக்க ஒருவார காலம் அவகாசம் கோரியுள்ளன.

தொழில் அமைச்சர் தயாகமகே, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்றோர் இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்டனர்.