(ஆர்.விதுஷா)

வெளிநாட்டு  சிகரெட்தொகை , மதுபானம் மற்றும் அழகு சாதனப்பொருட்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எடுத்துவர முற்பட்ட போது சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இன்று காலை 6.00 மணியளவில் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குடும்பத்திடமிருந்தே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவர்களின் பயணப்பொதியை சோதனையிட்ட போது அதிலிருந்து தேசிய ஓளடத ஒழுங்குபடுத்தல்  ஆணைக்குழுவின்  உறுதிப்படுத்தல்  அற்ற  அழகுசாதனப்பொருட்கள் , மதுபான போத்தல்கள் 30 மற்றும் 25 சிகரெட் பெட்டிகள் என்பன சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மதுபானம் மற்றும் சிகரெட் என்பன தேசிய ஒளடத அணைக்குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,  அதனை நாட்டிற்குள் எடுத்து வர முற்பட்ட இலங்கை பிரஜைகளுக்கு எவ்வித தண்டப்பணங்களும் அறவிடப்படவில்லையெனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.