எரிபொருள் விலை இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் பெற்றோல் 92 மற்றும் 95 ஒக்டைன் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாவாலும் டீசல் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாவாலும் சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு லிற்றர் பெற்றோல் ஒக்டைன் 92 - 123   ரூபாவாகவும் ஒரு லிற்றர் பெற்றோல் 95 ஒக்டைன் 147 ரூபாவாகவும் டீசல் ஒரு லீற்றரின் விலை 99 ரூபாவாகவும் சுப்பர் டீசல் ஒரு லிற்றரின் விலை 118 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

குறித்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவருமென நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.