யாழில் போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இரு இளைஞர்கள் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

யாழ்ப்பாணம், கைதடிச் சந்தியில் வைத்து இன்று அதிகாலை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் 5000 ரூபா பெறுமதியுடைய 20 நாணயத்தாள்களை வேறு நபர் ஒருவருக்கு கைமாற்ற முற்பட்டவேளை  புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் சாவகச்சேரி பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.