(நா.தினுஷா)

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

தேசிய கொள்கைகளை கருத்தில் கொள்ளாது கைசாத்திடப்பட்டுள்ள சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியும் சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடலுக்கான அனுமதியினை பெற்றுத்தருமாறு கோரியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்ரத்தக ஒப்பந்தம் உருவாக்கப்படும் போது நிபுணர்களின் ஆலோசனைகள் எதுவும் பெற்றுக்கொள்ளப்பட வில்லை. அதேபோன்று அமைச்சரவை அங்கிகாரம் பெறாமலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமலும் இந்த சட்ட இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுன்னர்.