(நா.தினுஷா) 

மாகாண சபை தேர்தல்  விகிதாசார முறையில் நடத்தப்பட வேண்டுமானால் புதிய முறையை நீக்குவதோடு மீண்டும் பழைய முறையை அமுல்படுத்துவதற்கான சட்ட மூலமும் பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறே  பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டுமானால் குறைந்தது ஐந்து மாதகாலமாவது தேவைப்படுமென தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதியுடன் மேல் மற்றும் தென் மாகாணங்களினதும் செப்டம்பர் 29 ஆம் திகதி ஊவா மாகாண சபையின் கால எல்லையும் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் ஆறு கட்சி தலைவர்கள் பழைய முறையில் பாராளுமன்ற தேர்தலை பழையமுறையில் நடத்த விருப்பினை வெளியிட்டுள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சியும் இந்த நிலைபாட்டிலேயே உள்ளதாக அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார். 

மாகாண சபைத்தேர்தலை நடத்துவதில் நிலவும் சிக்கல் நிலை தொடர்பிலும், தேர்தலை நடத்தவேண்டிய முறைக்குறித்தும் தெளிவுப்படுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.