(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்)

எல்லை நிர்ணய செயற்பாடுகளில் முரண்பாடுகள் இருப்பதன் காரணத்தினால் பழைய முறையில் தேர்தலை நடத்த கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே எந்தவொரு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்  என சபை முதல்வரும்  அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை  தொடர்பாக பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மீளாய்வு குழுவின் அறிக்கையின் தாமதம் தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான தினேஸ் குணவர்தனவினால் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளை தொடர்ந்து  சபையில் எழுந்த வாத விவாதங்களின் போது எதிர்க்கட்சியினர்,  அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுவதாக கருத்துக்களை முன்வைத்த நிலையில் அது தொடர்பாக தனது கருத்தை முன்வைத்து  போதே சபை முதல்வர்  லக்‌ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.