(இராஜதுரை  ஹஷான்)

பாராளுமன்ற தேர்தலை தற்போது நடத்த எவ்வித அவசியமும்  கிடையாது என்றால் ஜனாதிபதி தேர்தலையும் இவ்வருடத்தில்  நடத்துவதற்கு எவ்வித தேவைகளும் கிடையாது. இரண்டு தேர்தலுக்கும் பதவி காலம் காணப்படுகின்றது. ஆகவே  முதலில்   நடத்தப்பட  வேண்டியது  மாகாணசபை தேர்தலே தவிர பிற தேர்தல்கள் அல்ல என   பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ்  பத்திரன தெரிவித்தார்

பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை  காரியாலயத்தில் இன்று  புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.