ஜனாதிபதியின் காரியாலயத்தின் முன்னாள் அதிகாரி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கும் வெளிநாடு செல்ல நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் காரியாலயத்தில் கடமையாற்றிய முன்னாள் அதிகாரி குசும்தாச மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான பியதாஸ திசாநாயக்க ஆகியோர் சுமார் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்றக்கொண்ட மோசடி தொடர்பில் அவர்களுக்கு எதிரான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அவர்கள் இருவரையும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் வேண்டுகோளின் பேரில் குறித்த உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.