சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தை 2019 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு அமைச்சர் அக்கில அமைச்சர் அக்கில விராஜ்காரியவசமின் வழிகாட்டலின் கீழ் கல்வியமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

அதன்படி, மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் இரண்டு லட்சம் ரூபாவும் அரச வைத்தியசாலையில் அல்லது அரச ஆயுர்வேத வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் பட்சத்தில் நாளாந்தம் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வெளிவாரியான சிகிச்சைகளின்போது 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வழங்கப்படும். 

பெற்றோர் அல்லது பாதுகாவலர் மரணிக்கும் பட்சத்தில் ஒருவருக்கு இரண்டு லட்சம் ரூபாவும் மாணவர் உயிரிழக்கும் பட்சத்தில் ஈமைக்கிரியைகளுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் முழுமையாக அல்லது நீண்டகால இயலாமைக்கு உட்படும்போது வருடாந்தம் 50 ஆயிரம் ரூபா முதல் 2 லட்சம் ரூபா வரையும்பெற்றுக் கொள்ள முடியும். 

அத்துடன் கொடிய நோய் ஏற்படும் பட்சத்தில் இரண்டு லட்சம் ரூபா பயனைப்பெற்றுக் கொள்ளவும் முடியும்.