அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வி -அசாத் சாலி 

Published By: R. Kalaichelvan

09 Jan, 2019 | 03:19 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதனால் மேல்மாகாண பாடசாலைகளை முன்னேற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.

மேல் மாகாணத்தின் 8ஆவது ஆளுநராக கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் இன்று தனது கடமையை ராஜகிரியவில் அமைந்துள்ள ஆளுநர் பணிமனையில் கடமையை பொறுப்பேற்றார்.  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாகாண ஆளுநர்கள் மற்றும் மாகாணசபை முதலமைச்சர்கள் இணக்கப்பாட்டுடன் இணைந்து செயற்பட்டால்தான் அந்த மாகாண மக்களின் தேவைகளை மேற்கொள்ளமுடியும். என்னை பொறுத்தவரையில் நான் எப்போதும் சத்தியத்துக்காக குரல் கொடுத்து வருபவன். அதனை மேல் மாகாண முதலமைச்சருடன் இணைந்து செய்யமுடியுமானால் அதற்கும் நான் தயாராகவே இருக்கின்றேன்.

மேலும் மாகாண ஆளுநர் வாசஸ்தலமானது அந்த மாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்றும் இடமாகும்.அதனால் மேல் மாகாண ஆளுநர் வாசஸ்தலத்தில் அரசியல் செய்ய இடமளிக்கமாட்டோம். 

இந்த இடத்துக்குவரும் அனைத்து மக்களுக்கும் சேவை செய்வது எனது கடமையாகும். இதன்போது கட்சி பேதம் பார்க்கமுடியாது. அதனை நான் ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு நான் செயற்பட்டதும் இல்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24