அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிக்கிடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந் நிலையில் இப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணிக் குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

அதன்படி தினேஷ் சந்திமால் தலைமையிலான இவ் அணியில் திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமன்ன, குசல் மெண்டீஸ், சதீர சமரவிக்ரம, தனஞ்ய டிசில்வா, நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, சந்தகான், சுரங்க லக்மால், நுவன் பிரதீப், லஹிரு குமார, துஷ்மந்த சமீர மற்றும் கசுன் ராஜித ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி பிரிஸ்பேனிலும், இரண்டாவது போட்டி பெப்ரவரி மாதம் முதலாம் திகதியும் இடம்பெறவுள்ளது.