(ஆர்.விதுஷா)

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பமுணு ஆராச்சிலாகே  துமிந்த எனப்படும்  மொஹமட்  சல்மான் ரில்வான் என்றழைக்கப்படும் பப்பா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபர்  கடந்த 3 ஆம் திகதி   5 கிராம்  340 கிலோகிராம் ஹெரொயின் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால்  கைது செய்யப்பட்டு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டது . 

இதற்கமைய நீதிமன்ற அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகளுக்கமைய  மேற்படி சந்தேக நபர் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள்களின் ஓட்டுனராக செயற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

அதற்கமைய கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 03 அம் திகதி பிற்பகல் 5 மணியளவில்  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  மாளிகாவத்தை பௌத்தாராம வீதியில்  5 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்  குறித்த சந்தேக நபர்  செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்  28 வயதுடைய  இல 132- 483 மல்வத்தை , கிராண்பாஸ் , கொழும்பு -14 பகுதியை சேர்நத்  பமுணு ஆராச்சிலாகே  துமிந்த எனப்படும்  மொஹமட்  சல்மான் ரில்வான் , பப்பா எனப்படுபவரே விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. 

இந்த நிலையில்  மேற்படி சந்தேக நபரிடம்  மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே  பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்புடைய தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.