அறிமுக இயக்குநர் அருண்சந்திரன் இயக்கவிருக்கும் ‘செல்லப்பிள்ளை ’என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்க நடிகர் கௌதம் கார்த்திக் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ஹர ஹர மஹாதேவகி, இருட்டுஅறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் ஹொரர் நாகைசுவை படங்களில் நடித்து வணிக ரீதியில் வெற்றிப் பெற்ற நடிகர் கௌதம் கார்த்திக் அடுத்ததாக செல்லப்பிள்ளை என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதனை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றிப்பெற்ற படங்களின் இயக்குநர் பொன் ராமின்  உதவியாளராக பணியாற்றிய அருண் சந்திரன் இயக்குகிறார் . 

கௌதம் கார்த்திக்குடன் சூரியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழிலநுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் ‘தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.