மாணவியொருவர், கொலை செய்யப்பட்டு சடலமானது அரை நிர்வாணமான நிலையில்,  சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியினரை, பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உக்ரைனில் உள்ள ஒரு சாலையில் இருந்த குப்பை தொட்டியில் பெரிய சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அவ்வழியாக சென்ற சிலர் சூட்கேசை திறந்து பார்த்த போது உள்ளே அரை நிர்வாண கோலத்தில் இளம் பெண்ணொருவரின் சடலம் இருந்துள்ளது.

இதை பார்த்து அதிச்சியடைந்த நபர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சூட்கேசில் இருந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் டரியா பிலோஸ் (19) என்றும் அவர் கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது. மூச்சை திணறடித்து டரியா கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சூட்கேஸ் கிடந்த இடம் அருகில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் சில நபர்கள் கூறுகையில், குறித்த சம்பவ தினத்திற்கு முதல் நாளிரவு, பத்து மணியளவில் ஐந்து ஆண்கள் அந்த சூட்கேசுடன் வந்தார்கள்.

பின்னர் குப்பை தொட்டியில் சூட்கேசை தூக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனிடையில் உயிரிழந்த டரியா புத்தாண்டை கீவ் நகரில் கொண்டாடிவிட்டு, மத்திய உக்ரைனுக்கு கடந்த 3ஆம் திகதி வந்துள்ளார்.

யாருடன் டரியா வந்தார் என்ற விபரம் இன்னும் தெரியாத நிலையில் குற்றவாளிகளை பிடிக்க பொலிசார் தீவிர விசாரணை நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடதக்கது.