எதிரி விமானத்தின் ஒலிகளை கிரகிப்பதற்காக உட்புறம் குழி  வடிவிலான சுவரை பிரிட்டன் வடிவமைத்தது.

விமான ஒலி அலைகளை உள்வாங்கப்படுவதனை கண்காணிப்பதன் மூலம், தரைப் படைகளை ஆயர்த நிலையில் வைத்திருக்க உதவுமெனவும், பிரிட்டன் நகரங்களை காக்க முடியுமென இவ்வாறான சுவர்களை அமைத்தனர்.

மஜ் வில்லியம் சன்சோமால் வடிவமைக்கப்பட்ட இந்த சுவர் வடிவம் ஓசை கண்ணாடிகள் என்று அழைக்கப்பட்டது. 

ரேடார் பயன்பாட்டுக்கு வந்து பிரபலமடையும் வரை அந்த சுவர் வடிவம் பயன்பாட்டில் இருந்தது வந்துள்ளது.

இந்த சுவர் குறித்த கதைகளை தனது தந்தையிடமிருந்து கேட்ட ஜோ பெட்டெட் ஸ்மித் பிரிட்டன் கடற்கரையோரங்களில் மிச்சமிருக்கும் இது போன்ற சுவர் அமைப்புகளை ஆவணப்படுத்தினார்.

பெட்டெட் ஸ்மித், தெரிவிக்கையில்,

 நான் சிறுவனாக இருந்த போது எனது தந்தை எனது தாத்தா குறித்து ஏராளமான கதைகள் சொல்லி இருக்கிறார். அவருக்கு ரேடார் தொழில்நுட்பத்தில் இருந்த விருப்பம் குறித்து சொல்லி இருக்கிறார்."

இந்த சுவர் 1916 ஆம் ஆண்டு ரெட்கார் பகுதியில் அமைக்கப்பட்டது.அப்போது இதனை சுற்றி சதுப்பு நிலம் இருந்திருக்கலாம் என ஆய்வு செய்திகள் கூறுகின்ற இன்நிலையில் தற்போது அப்பகுதியில் வீடுகளாக தோற்றம் அளிக்கின்றது.

முதலில் ஸ்மித் தன் குடும்பம், தன் குடும்பத்திற்கும் போருக்கும் இருந்த தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். 

இதன் போது இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வில் அவருக்கு இந்த ஓசை கண்ணாடி குறித்து தெரியவந்திருக்கிறது எனினும் அவரின் ஆர்வம் ஓசை சுவர் நோக்கி சென்று விட்டது.அதன் மீது கொண்ட அதிக ஆர்வத்தினால் அவர் பல்வேறு கோணங்களில் ஆய்வுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பல இடங்கள் அலைந்து திரிந்து அந்த சுவர்களைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியுள்ளாமை குறிப்பிடத்தக்கது.