"அடுத்த ஜென்மத்தில் இதைவிட நல்ல பிறவியாய் பிறப்பாய்": மனைவியின் தலையை துண்டித்து, பூஜை நடாத்திய கணவன்..!

Published By: J.G.Stephan

09 Jan, 2019 | 11:26 AM
image

இரத்தினபுரியில் தனது மனைவியின் கழுத்தை துண்டித்து அதனை பூஜை செய்து மறைத்து வைத்த கணவர் சிக்கினார். இச்சம்பவம், கடந்த மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

தனது தாயை கொலை செய்துள்ளதாக மகன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகன் வழங்கியுள்ள வாக்குமூலத்தில், தனது தந்தை சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் சில நேரம் அதிக கோபத்துடன் காணப்படுவதோடு, தனக்கு தெய்வ சக்தி உள்ளதாக அடிக்கடி கூறிவருவார்.

இவரை குணப்படுவத்துவதற்காக இந்தியாவரை அழைத்து சென்றிருந்தோம். எனினும் குணமடையாத காரணத்தினால் உள்ளுரிலும் சிகிச்சை வழங்கினோம்.

ஆனால் குடும்பத்திற்கு தோசம் ஏற்பட்டுள்ளதாக அடிக்கடி கூறிவருவார். இதனால் விரக்தியடைந்த அம்மா, நான் எல்லோரையும் விட்டு விட்டு செல்ல போகிறேன் என கூறினார்.

இதனால் கோபமடைந்த அப்பா அம்மாவை கத்தியால் பல முறை வெட்டினார். இதனை தடுக்க சென்ற தங்கையையும் தாக்கினார்.

பின்னர் அம்மாவின் தலையை துண்டித்து விட்டு சடலத்தை வீட்டில் மறைத்து வைத்தார்.

துண்டித்த தலையை உந்துருளியில் எடுத்து சென்றார் என மகன் வழங்கியுள்ள வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பொலிஸாரின் மோப்ப நாயை பயன்படுத்தி துண்டுடிக்கப்பட்ட தலையை கண்டுபிடித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான சிறுமி காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், துண்டிக்கபட்ட தலையை எடுத்து சென்று சுத்தப்படுத்தி, அடுத்த ஜென்மத்தில் இதைவிட நல்ல பிறவியாய் பிறப்பாய் என அவர் பூஜை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரும்பு வர்த்தகத்தில் ஈடுபட்ட குறித்த நபர் தனது குடும்பத்துடன் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்துள்ள நிலையில், மந்திர தந்திரங்களை நம்பி இன்று தனது வாழ்க்கையையும் மாத்திரமின்றி தனது இரண்டு பிள்ளைகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக்கியுள்ளார் என்பதே இறுதியில் உண்மையாகிவிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில். புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்காது பிரார்த்தனை...

2023-03-20 15:39:44
news-image

தனது எஜமானின் வங்கி அட்டையிலிருந்து 50...

2023-03-20 15:37:57
news-image

2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை...

2023-03-20 15:24:14
news-image

இலங்கை தனது கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வெளிப்படை...

2023-03-20 15:06:13
news-image

பெண்ணொருவரிடம் நம்பிக்கை அடிப்படையில் பணம் கொடுத்து...

2023-03-20 15:27:18
news-image

விசாரணைக்குச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்...

2023-03-20 14:37:36
news-image

இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலை -...

2023-03-20 13:58:01
news-image

அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா...

2023-03-20 13:32:11
news-image

நெற் செய்கையாளர்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க 36...

2023-03-20 13:30:28
news-image

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் புதிய உணவு...

2023-03-20 13:14:55
news-image

யாழில் கஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிளைக்...

2023-03-20 12:28:42
news-image

மட்டக்களப்பு பூநொச்சிமுனை பாலம் திருத்தப்படாமையால் மக்கள்...

2023-03-20 12:19:55