வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தனது கடமைகைள இன்று (09) முற்பகல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார். 

ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்த கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநருடைய செயலாளர் உள்ளிட்ட பணிக்குழாமினர் உற்சாகமாக வரவேற்றனர்.

முன்னாள் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.விகே சிவஞானம், யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட், இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் அவர்கள்,  வடமாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் அரசாங்க அதிபர்கள், யாழ்மாவட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானிகள், வடக்கு மாகாண அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.