எமக்கு மருந்து வழங்க முடியாது என்றால் எங்களின் சிறுநீரகத்தை அகற்ற வேண்டாம் என பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கவலையுடன் விசனம் தெரிவித்துள்ளனர். 

பதுளை - கண்டி உட்பட்ட அரச வைத்தியசாலைகளில் சிறுநீரக நோயாளர்களுக்குரிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

சிறுநீரக நோயாளிகளுக்கு தேவையான மருந்து வகைகள் அரச வைத்தியாசாலையில் இல்லாமையால் குறித்த  வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் அவல நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். 

குறித்த மருந்துகளுக்காக மாதாந்தம் 35,000 தொடக்கம் 40,000 ரூபா வரை செலவிடப்படுகின்றதாக பதுளை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெறுவதற்காகவரும் சிறுநீரக நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.