சர்வதேச கிரிக்கெட் சபை தனது 105 ஆவது உறுப்புரிமை நாடாக அமெரிக்க கிரிக்கெட் அணியை அங்கீகரித்துள்ளது.

இதற்குரிய உத்தியோகபூர்வ ஏற்பாடுகள் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் சபை 150 ஆவது உறுப்புரிமை நாடாக அமெரிக்காவை அங்கீகரித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் சபைத் தலைவர் பராக் மராத்தே தெரிவிக்கையில்,

"இது உண்மையிலேயே ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட்டிற்கும் மற்றும் முழு அமெரிக்க கிரிக்கெட் சமுதாயத்திற்கும் ஒரு ஆச்சரியமான நாள்.  சர்வதேச கிரிக்கெட் சபையின் இயக்குனர் சபைக்கும் ஏனைய 104 ஐ.சி.சி.யின் உறுப்புரிமை நாடுகளுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.