மும்பையில் வசித்து வந்த தொலைக்காட்சி நடிகையான பிரதியுஷா காதல் தோல்வியால்  தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரதியுஷா (24),பிரபலமான காந்திவிலியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர் காதல் தோல்வி காரணமாகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள கோகிலா பென் மருத்துவமனைக்கு கொண்டு சென்றப்போது  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதுபற்றி தகவல் அறிந்த காந்திவிலி பொலிசார் பிரதியுஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக போரிவிலியில் உள்ள பகவதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.