வவுனியாவில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட திருடனை அடையாளம் காண்பதற்காக இரு வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களை ஆய்வு செய்த பொலிசார் பல மாதங்களாக குறித்த நிலையங்களின் கண்காணிப்பு கமராக்கள் இயங்காத நிலையில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் கடனட்டை திருடப்பட்ட நிலையில் தனது கடனட்டை காணாமல் போனதை அறிந்தவுடன் வங்கிக்கு அறிவித்தல் வழங்கி கடனட்டையின் பணப்பரிமாற்றத்தை நிறுத்தியதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.
திருட்டு போன கடனட்டையை பயன்படுத்தி வவுனியாவில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்களில் சுமார் எட்டாயிரம் ரூபாவிற்கு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என வங்கியினால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த விற்பனை நிலையங்களில் கண்காணிப்பு கமராக்களை பொலிசார் ஆய்வு செய்த போது இரு வர்த்தக நிலையங்களில் ஒன்றில் கமரா பொருத்தப்படாமலும் மற்றைய வர்த்தக நிலையத்தில் கமரா இயங்காமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM