(எம்.மனோசித்ரா)

மக்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி தனிப்பட்ட நோக்கத்தை உள்ளடக்கிய கொள்கைகளை புறக்கணிக்கின்ற தலைவர்களிடத்தில் நாட்டை ஒப்படைக்க வேண்டிய தீர்மானங்களை மேற்கொள்வார்கள் எதிர்பார்க்கின்றேன். ஊழல் மோசடிகளை முழுமையாக தோல்வியடைச் செய்வதில் நாம் தோல்வியடைந்துள்ளோம். அந்த தோல்வியை வெற்றி கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

வடக்கு மக்களின் நீர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொடுத்த பின்னரே முழுமையாக மகிழ்ச்சியடைய முடியும். எஞசியுள்ள காலப்பகுதியில் ஜனநாயகம் மற்றும் பொருளாதாரம் மாத்திரமின்றி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதோடு நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவேன் என உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

இன்று செவ்வாய்கிழமை லக்கல பசுமை நகரத்தை திறந்து வைக்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.