பதுளை, பொது வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  

வைத்தியசாலையில் உள் இடமாற்றங்களில் எழும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த பணிகிஷ்கரிப்பை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். 

தங்களின் தொழில் பற்றி எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் தொழிற்சங்க அதிகாரி அதிகாரத்தை தமது கைகளில் எடுத்துக்கொண்டு இடமாற்றத்தை மேற்கொண்டுள்ளமையால் வைத்தியசாலையின்  நாளாந்த கடமைகளில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, நாளாந்தம் செய்த தங்களின் பணியை நீக்கிவிட்டு  வேறு பணிகளை வழங்கியமையால் வைத்தியசாலையின் காரியாலயம் மிக கடினமான நிலைக்கு முகம்கொடுப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.  

தங்களின் பணிகளை மாற்றியமையால் தொழிற்சங்கங்களிடம் தொடர்புகொண்டு தமது தரத்துக்கு ஏற்ற பணிகளை பெற்றுக்கொடுக்குமாறு குறித்த ஊழியர்கள் வைத்திய அதிகாரியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். 

தமது குறித்த கோரிக்கைகளை மேற்கொள்ளும் வரை பணிபப்கிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.