மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக பிரதி சபாநாயகர்  சற்றுமுன்னர் பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் தல‍மையில் ஆரம்பமாகியது.

இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இறுதித் தீர்மானம் அறிவிக்கப்பட்ட நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க முடியாதெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சித் தலைவரெனவும் பிரதி சபாநாயகர்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சிகளுக்கான நிதியொதுக்கீடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.