மஸ்கெலியா பகுதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் அதிகளவு கட்டணங்கள் அறவிடப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக கண்டி தனியார் பஸ் அதிகாரியிடம் பல முறை கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் எந்த விதமான  பலன் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவமானது ஒரு சில பஸ்களில் நடைமுறையில் இருப்பாதாக தெரிவித்த மக்கள் குறித்த பஸ்களில் பயணச்சீட்டு வழங்கப்படுவதில்லையெனவும் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

அதிக பணம் ஏன் அறவிடுகிறார்கள் என்று கேட்டால் வாய்தர்க்கம் பண்ணுவதாகவும்,முறையாக பயணிகளை நடத்துவது இல்லை,கட்டண விபரம் ஒட்டப்படாமல் தன்னிச்சையாக கட்டணம் அறவிடுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். 

பயணிகள் சம்மந்தப்பட்டோர் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பயணச்சீட்டு மற்றும் கட்டண குறைவை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.