பங்களாதேஷ் அவாமி லீக் கட்சித் தலைவரான 71 வயதுடைய ஷேக் ஹசினா நான்காவது முறையாகவும் அந்நாட்டுப் பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

வங்க தேசத்தில் மொத்தம் 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து  உடனடியாக வாக்குப்பதிவு தொடங்கியது.

இதனிடையே வாக்குப்பதிவு நடந்தபோது பல்வேறு நகரங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் பலியாகினர்.

போட்டியிட்ட 299 தொகுதிகளில் 288-ல் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த  வெற்றி மூலம் ஷேக் ஹசினா நான்காவது முறையாக பங்களாதேஷ் நாட்டின் பிரதமராக பதவியேற்று வரலாற்றுச் சாதனை படைத்தார். அத்துடன் அவருடன் இணைந்து 42 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெறும் 6 இடங்களையே கைப்பற்றியதுடன், இந்தத் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்றும் மீண்டும் முறையாக தேர்தல் நடைபெற வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது.