ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி;ஜயசேகரவை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்டித்துள்ளார்
ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியி;ன் பொதுச்செயலாளர் ஊடகஅறிக்கைகளை வெளியிடும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
சதிமுயற்சியில் ஈடுபடுபவர்களை பலப்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிடக்கூடாது என மகிந்த ராஜபக்ச சிறிசேன முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார்
முன்னாள் ஜனாதிபதியை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு தயாசிறிஜயசேகர அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்
மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் என்றால் அவர் கட்சிக்கு திரும்பி எங்களுடன் இணைந்து பணியாற்றவேண்டும், என தெரிவித்திருந்த தயாசிறிஜயசேகர மகிந்த ராஜபக்ச மற்றொரு கட்சியுடன் இணைந்து பணியாற்ற முயன்றால் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையை இழக்கவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி தான் சுதந்திரக்கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் என்கிறார்,கட்சியின் ஆலோசகர் என்கிறார் இது குறித்து அவரிடம் கேள்வியெழுப்ப தீர்மானித்துள்ளோம் எனவும் தயாசிறிஜயசேகர குறிப்பிட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM