லுணுகம்வெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படவ்கம பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் வெட்டுகாயங்களுடன் இருந்த பெண்ணை லுணுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளாக வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளது.

படவ்கம, உனாதுவெவ பகுதியை சேர்ந்த 30  வயது மதிக்கத்தக்க  பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக தனது இரு பிள்ளைகளுடன் கடந்த சில மாதங்களாக தனது தாய் வீட்டில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி தன்னுடைய கணவன் தனது இரு பிள்ளைகள் குறித்த அக்கறை இல்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

இதற்கமைய சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.