அவுஸ்திரேலிய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி, ரோகித் சர்மா மற்றும் கேதர் யாதவ் ஆகியோர் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலியாவுடன் டெஸ்ட், இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில், இவ் விரு அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகளில் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி சனிக்கிழமை சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது. 

இந் நிலையில் இப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்திய அணியின் டோனி, ரோகித் சர்மா மற்றும கேதர் யாதவ் ஆகியோர் அவுஸ்திரேலியவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

ரோகித் சர்மா அவுஸ்திரேலிய அணியுடானான இருபதுக்கு 20 மற்றும் மூன்று டெஸ்ட் பேட்டிகளில் விளையாடிய நிலையில் தனக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு இந்தியா வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.