பால்மாவின் விலையை அதிகரிக்க இறுதித்தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை.

பால்மா விலையை அதிகரிக்க எவ்விதமான இறுதித்தீர்மானமும் எடுக்கவில்லை என கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. 

வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பால் மற்றும் பால் மாவின் விலைகளை அதிகரிப்பதற்கு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. குறித்த விடயம் தொடர்பாக உலக சந்தையின் விலைகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து ஆய்வு செய்வதாக நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பால் மாவின் விலைகளை அதிகரிக்க இதுவரை இறுதித்தீர்மானமெதுவும் எட்டப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.