தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு மீண்டும் நடைபெறவுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட 3 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இன்றைய பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர்.