(இராஜதுரை ஹஷான்)

எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கையினை ஜனாதிபதியிடம்  விரைவாக  சமர்ப்பித்து,பிரதமர் என்ற  ரீதியில் மாகாணசபை தேர்தலை   விரைவுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன  ஹெட்டியாராச்சி பிரதமர்   ரணில் விக்ரமசிங்கவிங்கவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவத்தின் பொருப்புக்களை முன்னெடுக்கும்  தாங்கள்  உடகடியாக  தேர்தலை நடத்த  நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஜனநாயகத்தை மதிக்கும் அரசாங்கம் என்ற அடிப்படையில் மக்களின் தேர்தல் உரிமைகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

தயாரிக்க எல்லை நிர்ணய  மீளாய்வு  அறிக்கையினை ஜனாதிபதியிடம் விரைவாக கையளிப்பதுடன், பிரதமர் என்ற ரீதியில் மாகாணசபை  தேர்தலை விரைவில்  நடத்துவதற்கான நடவடிக்கையினை  முன்னெடுக்க  வேண்டும்.