(ஆர்.விதுஷா)

கொழும்பு தெமட்ட கொடையில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்துக்குள் அத்து மீறி சட்டவிரோத கும்பலொன்றில் உறுப்பினராகவிருந்து குழப்பநிலையயை ஏற்படுத்தியமை தொடர்பில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ச கீதனகே இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 

இவ்வாறு கைது செய்யப்ப்டட அவர் இன்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது இம்மாதம் 11 அம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். 

அத்துடன், குறித்த சந்தேக நபரிடம் பொற்றொலிய கூட்டுத்தாபன வளாகத்துக்குள் ; அத்து மீறி நுழைந்து  குழப்பம் விளைவித்த ஏனைய சந்தேக நபர்களையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு நீதிவான் லங்கா ஜயரட்ன கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டார்.