பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டின்  சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வழங்குமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவுக்கெதிராக ஜனாதிபதி செயலகம் மேன்முறையீடு செய்யும் தீர்மானம் தொடர்பாக ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர இது தொடர்பில் குறிப்பிடுகையில், 

ஜனாதிபதியின் புதிய வருடத்தின் வாக்குறுதிக்கிணங்க ஊழலுக்கெதிராக போராடுவதற்கு உறுதியளித்துள்ளதுடன்  2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி செயலகத்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சொத்துக்கள் விபரங்களை  பொதுமக்களின் பார்வைக்கு பிரகடனப்படுத்தப்படுவதைத் தடுக்க முயற்சி செய்வது ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது என்றார்.