(எம்.ஆர்.எம்.வஸீம்)

உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் வெற்றிடமாக இருந்த நீதிபதிகளை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களுக்கு அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது.

அரசியலமைப்புச்சபை இன்று காலை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில்  பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடியது. 

இதன்போது அரசியலமைப்பு சபை உறுப்பினர்களான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் தலதா அத்துகோரள, பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மற்றும் சிவில் உறுப்பினர்களான ஜாவிட் யூசுப், நாகாந்த செல்வகுமாரன், ஜயன்ந்த தனபால ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன் இன்றைய அரசியலமைப்பு சபை கூட்டத்தின்போது உயர் நீதிமன்ற நீதியரசர் மற்றும் மேன்முறையீட்டு நீதிபதி வெற்றிடங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பப்பட்ட பரிந்துரை தொடர்பாக பிரதானமாக ஆராயப்பட்டது. 

அதன் பிரகாரம் உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர ஓய்வுபெற்றுச்சென்றதையடுத்து அந்த வெற்றிடத்துக்கு ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பப்பட்ட பெயருக்கு அரசியலமைப்பு சபையின் ஏகமனதாக அனுமதி கிடைத்துள்ளது.